By,சி.என்.அண்ணாதுரை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் – நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தீபாவளி விழாவினை முன்னிட்டு மத்தியஒன்றியத்திற்கு உட்பட்டதிமுக கிளைச் செயலாளர்கள், பல்வேறு சார்பு அணி அமைப்பாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி,புத்தாடைகள் இனிப்புகள் பட்டாசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து நிர்வாகி மத்தியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் பல்வேறு மக்கள் நல பணி திட்டங்கள் குறித்து வீடு தோறும் மக்களிடம் நிர்வாகிகள் சேர்க்க வேண்டும். மேலும் வருகிற2026 தேர்தலில் முதலமைச்சரின் லட்சியமான 200தொகுதிகளுக்கும் மேல் திமுக வெற்றி பெறக்கூடிய வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


