| தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு,ஆன்லைன் மூலம் விண்ணப்பம் தொடக்கம்10.10.2025 முதல் 9.11.2025 வரை 🌐 இணையதளம்: www.tnrd.tn.gov.in |
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுதல், வரி வசூல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது ஆகிய பொறுப்புகள் ஊராட்சி செயலாளர்களின் முக்கிய பணிகளாகும்.
1300-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்:
இந்தநிலையில், தமிழக முழுவதும் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை இனச் சுழற்சி (Rotation) முறையின் அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இணையதளம் வழியாக 10.10.2025 முதல் 9.11.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேலான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.தமிழில் படிக்கும் மற்றும் எழுதும் திறன் இருக்க வேண்டும்.
அரசு பணிக்கு பொருத்தமான வயது வரம்பு மற்றும் இனச்சுழற்சி விதிமுறைகள் அரசின் வழிகாட்டுதலின் படி அமையும்
விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்:
1. கல்வித் தகுதி சான்றிதழ்
2. சமூகச் சான்றிதழ் (SC/ST/MBC/BC முதலியன)
3. பிறந்த தேதி சான்றிதழ்
4. குடியிருப்பு சான்றிதழ்
5. வேலைவாய்ப்பு பதிவேடு நகல் (Employment Registration)
6.அடையாள அட்டை (Aadhaar / Voter ID)
மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

