December 1, 2025
#தூத்துக்குடி

கண்ணியம் கட்டுப்பாடு இல்லாத தவெக. கண்ணியத்துடன் விஜய் கூட்டம் நடத்த வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற காலகட்டத்தில் நிதி நெருக்கடி இருந்த போதிலும், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தீவிரமாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் சொல்லாததையும் கூட செய்து வருகின்றோம். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்படவில்லை. திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக, தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆனால் ஒன்றிய பாஜக அரசாக இருந்தாலும் சரி, தமிழகத்தை ஆண்ட கட்சியான அதிமுக வாக இருந்தாலும் சரி அவர்கள் என்ன வாக்குறுதி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமையாலும், சிறப்பான அணுகுமுறையாலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில்வளத்தை பெருக்கி மிகச் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பெறுவதற்கு ஓய்வின்றி உழைத்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெற்று பலன் அடைந்து வருகின்றார்கள். நிச்சயமாக மக்கள் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும். இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுவாா்.

த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் வருகின்ற இடம் எல்லாம் கூட்டம் இருந்தது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? விஜய் கட்சியில் கட்டுப்பாடு, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு கூட்டத்தை நடத்த வேண்டும். வரையறை இல்லாமல் வன்முறையாக இருக்கிறது. அவர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. விரைவில் கற்று கொள்வார்கள். திமுகவில் கடமை கண்ணியம் கட்டுபாடு கோட்பாடுகளை இன்று வரை கடைபிடித்து வருகின்றோம். முதலமைச்சரின் ஓரணியில் தமிழ்நாடு இயக்க முன்னெடுப்பில் ஒவ்வொரு வீடாக சென்று உறுப்பினர் சோ்க்கையை சேர்த்துள்ளோம் அதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனா். செப் 15ல் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை பாகம் வாரியாக நடைபெறும் கூட்டத்தில் எடுத்து கொள்ள உள்ளனா். தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெறுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தமிழன் தலைநிமிர்ந்து நடப்பதற்கு முதலமைச்சர் தான் காரணம் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநகர அவைத் தலைவர் ஏசுதாஸ், மண்டல தலைவர் பால குருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், நிர்மல் ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு , நாகராஜன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர்,பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அமைச்சரின் உதவியாளர் அல்பர்ட், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, அஸ்வின் துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐ.ரவி, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.