By பூங்கோதை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம். குமராசக்கணபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பக விநாயகர் கோவில் துர்க்கை அம்மன் கோவில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் கொடை திருவிழாவை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் டிஎஸ்பி அசோகன் உள்ளிட்ட சுரங்குடி காவல்துறையினர் முன்னிலையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் தீபாரணங்கள் நடைபெற்றது.
இதை அடுத்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனே செலுத்தினர்.
பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர் இதனை அடுத்து பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது திருவிழாவில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்தி சென்றனர் மேலும் விழாவிற்கான ஏற்பாடுகள் சேகர் தலைமையில் தனுஷ்கோடி கந்தசாமி சுந்தர கணபதி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
.

