December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க கோரி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

by, அண்ணாதுரை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் சில மாதங்களாக கடல் அரிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது இதனால் திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே இருக்கக்கூடிய அய்யாவழி வழிபாட்டு கோயிலும் அமலி நகர் மீனவர் கிராமமும் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது

கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்திடதமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையினை வலியுறுத்தியும்

திருச்செந்தூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடிய உடன்குடி அனல் மின் நிலைய பணிக்காக கல்லாமொழி பகுதி கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைத்து ஆழமான கடல் பகுதியில் பெரிய வகையிலான கப்பல் மூலமாக நிலக்கரிகளை கொண்டு வந்து இறக்கும் வகையில் பெரிய இறக்கு தளம் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் திருச்செந்தூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் திருச்செந்தூர் முருகன் கோவில், அய்யா வழி கோவில், அமலி நகர் மீனவர் கிராமம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.

எனவே உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்கு கடல் வழியாக நிலக்கரி இறக்குமதி செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்மேலும் கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கிற இறங்கு தளத்தையும் பாலத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் உடன்குடி அனல் மின் நிலைய பணிக்கு நிலக்கரியை கொண்டு வருவதற்குதூத்துக்குடியில் இருந்து ரயில் மூலமாக உடன்குடி நிலக்கரி கொண்டு வருவதற்கு திட்டத்தை தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா இரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசிக தூத்துக்குடி தென்காசி மண்டல செயலாளர் முரசுத் தமிழப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பிரேம் பாண்டியன், விசிக மாவட்ட வழக்கறிஞர் அர்ஜுன் பாண்டியன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் குரும்பூர் ஷங்கர், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார்விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர்திருச்செந்தூர் நந்தன், ஆறுமுகநேரி நகரபொறுப்பாளர்பாலகிருஷ்ணன்அமலி நகர் மீனவர் கிராமத்தைச் சார்ந்த மகளிர்கள் உட்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்.