by,CN. அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் 26.02.25 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி வரவேற்றார்.
முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;
மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் நடைபெறுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.இதில் பெறப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தெற்கு மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறைப்படுத்தி வருகிறோம்.
தெற்கு மண்டலத்தில் பல வார்டுகள் இணைக்கப் பட்டிருந்தாலும் நகருக்குள் உள்ள வாடுகளிள் உள்ள கட்டமைப்பு வசதிகள் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குடிநீர், சாலை, வடிகால் மற்றும் தெருவிளக்குகள் உள்ளிட்ட 85 சதவீத பணிகளை வழங்கி உள்ளோம்.
குறிப்பிட்ட சில இடங்களில் பேவர் பிளாக் சாலைகள், வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் பாதாள சாக்கடை திட்டமும் வரும் மே மாதத்தில் முழுமை பெறும். புதிய பூங்காக்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மக்களிடமிருந்து மகளிர் பூங்காவுக்கான கோரிக்கைகள் வந்துள்ளன அதற்கான ஆய்வுகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. முத்தையா புரம் திருச்செந்தூர் சாலை ரவுண்டானா பகுதியில் பக்தர்களின் வசதிக்காக பாதசாரிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இடத்தில் நமது கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் விதமாக விவசாயிகள் களையெடுத்தல், உப்பு வாறும் தொழிலாளர்கள், கப்பல் நங்கூரம் உள்ளிட்ட சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் வசதிக்காக தெற்கு மண்டலத்திற்கு கிளை அலுவலகம்
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 43, 45, 48, 49, 50, 51 ஆகிய வார்டுகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக கிளை அலுவலகம் காமராஜர் சாலை முனியசாமி புரம் மேற்கு சந்திப்பு பகுதியில் அமைக்க ஆய்வு செய்யப்படும் இம் முகாமில் பொதுமக்களிடமிருந்து 26 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து 26 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் ஜே.எஸ்.நகரில் கட்டப்பட்டு வரும் பேதை மறுவாழ்வு மையம் கட்டுமான பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, தொடர்ந்து எம்.டி.ஏ காலனி பூங்கா கட்டுமான பணிகளையும் மண்டல தலைவர் பாலகுருசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகர உதவி பொறியாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலா்கள் விஜயகுமாா், பட்சிராஜ், முத்துவேல், வைதேகி, முத்துமாரி, சரவணக்குமார், ராஜேந்திரன், சுயம்பு, வெற்றி செல்வன் மற்றும் இளநிலை பொறியாளர் செல்வம், பிரபாகர், வருவாய் அலுவலர் குருவையா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், வட்டச் செயலாளர்கள் சி.என்.ரவீந்திரன், பிரசாத், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.