விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 270 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணை கடந்த வாரம் யூனியன் அலுவலகத்தில் வைத்து நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக கே.சுந்தரேஸ்வரபுரத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் (2025-2026) விளாத்திகுளம் யூனியனை சாா்ந்த 110 பயனாளிகளுக்கு வீடு கட்டுதெற்கான கட்டுமானப்பணியை மாா்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜபூபதி, சிவசுந்தரம், பணி மேற்பார்வையாளர் அரவிந்த், திமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாாிமுத்து, மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

