December 1, 2025
#தூத்துக்குடி

தியாகி கக்கன் பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு காங்கிரஸார் மரியாதை செய்தனர்

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் தியாகி கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் ஐஎன்டியூசி பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்திய விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவரும், தமிழக முன்னாள் உள்துறை அமைச்சருமான தியாகி கக்கன் 116வது பிறந்த நாள் 18.06.25 இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள கக்கன் பூங்காவில் அமைந்துள்ள தியாகி கக்கன் முழுவுருவ சிலைக்கு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகர செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பேச்சாளர் பார்த்திபன், திமுக ஆதிதிராவிடர் நலக் குழு மாவட்ட தலைவர் சி.பெருமாள், காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 சென்ட் பாக்கியராஜ், ராஜாராம் மற்றும் சுந்தர்ராஜ், செல்வம், ஜோக்கின்ஸ், ஜான்வெஸ்லி, ஐஎன்டியூசி முத்து , ரமேஷ், சாரதி, கிரிதரன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.