இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் சி. பி. இராதாகிருஷ்ணன்
புதுதில்லி,தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடிப்படைத் தொண்டராக தொடங்கி நாட்டின் உயரிய அரசியலமைப்பு பொறுப்பில் அமர்ந்திருப்பது பாஜக கலாசாரத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. இராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிரணி வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி பெற்ற 300 வாக்குகளை வீழ்த்தினார். ராஜ்யசபா செயலாளர் பி. சி. மோடி தலைமையில் நடைபெறுகையில், தேர்தல் முறையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
பாஜக மாடல்: தொண்டனின் உழைப்புக்கு உயரிய அங்கீகாரம்,
பாஜக தலைவர்கள் இதைத் தொடர்ந்து, இராதாகிருஷ்ணனின் உயர்வு கட்சியின் வாரிசு அரசியல் இல்லாத பண்பையும், உழைப்புக்கு வழங்கப்படும் மதிப்பையும் பிரதிபலிக்கிறது எனக் கூறினர்.
மேலும் தமிழ்நாட்டில் பல முன்னணி தலைவர்கள்—மறைந்த ஆளுநர் இல. கணேசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களாக இருந்து உயர்ந்த பதவிகளை வகித்தனர். இது தான் ஜனநாயகத்தின் கொள்கை தொடர்ந்து உழைப்பின் மூலம் சி. பி. இராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக உயர்ந்திருப்பது பாஜக மாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
வ.உ.சி கல்லூரி முன்னாள் மாணவர்;
இவர் அக்டோபர் 20, 1957ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் ஊரில் பிறந்தார் மேலும் தூத்துக்குடி வ.உ.சி சிதம்பரனார் கல்லூரியில் இளங்கலை வணிகநிர்வாகாம் பயின்றார்.கோயம்புத்தூரிலிருந்து இருமுறை மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் (1998, 1999).
அதேபோல் ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி (இளவரசர் ஆளுநர்) மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம். பல கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவு பேணியவர் என்று வர்ணிக்கப்படுகிறார்.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும், ஆதரவாளர்கள் இதனை பாஜக தொண்டர்களின் உழைப்புக்கான அங்கீகாரம் , தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி.தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தெற்கு மாவட்ட துணை தலைவர் R. ஜெயக்குமார் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் .


