December 1, 2025
#Technology

BSNL நெத்தி அடி.. 30 நாட்கள் இலவசம்.. ரூ.699 போதும்.. 5 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 500எம்பி டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போல 4ஜி சேவைகளை கொடுக்கும் வரையில், கஸ்டமர்களை தன்பக்கம் தக்க வைக்க பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, கூடுதல் வேலிடிட்டி சலுகையை (Extra Validity Offer) கையில் எடுத்திருக்கிறது. இந்த சலுகை கொண்ட திட்டங்களின் விவரங்கள் இதோ.

இந்த கூடுதல் வேலிடிட்டியில் மொத்தம் 3 திட்டங்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் சர்வீஸ் வேலிடிட்டி மட்டும் கிடையாது. ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த சலுகைகளையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். திட்டங்களுக்கு ஏற்ப 15 முதல் 30 நாட்கள் வரையில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முன்னதாக 120 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இப்போது, கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி உடன் 5 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *