December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி:தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான இன்று 15-07-2024 திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குளத்தூர்ஊராட்சி குளத்தூர் இந்து நாடார் நடுநிலை பள்ளி, பனையூர் இந்து நாடார் நடுநிலை பள்ளி மற்றும் குளத்தூர்

TNDTAஅரசுஉதவிபெறும்தொடக்கப்பள்ளியில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி துவக்கி வைத்தார். அவர்களோடு வட்டார வளமை பார்வையாளர் அனிதா விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி தலைமை ஆசிரியர் ஷமிலா உதவி ஆசிரியர் லதா மேரி இந்து நாடார் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில் நாதன் கெங்கு மணி குளத்தூர் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளோடு அமர்ந்து காலை உணவு அருந்தினார்கள்.