தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்களும், வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.
அந்த வரலாறு காணாத கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கிய பாரதிய ஜனதா கட்சி, அப்போது வீடுகளை இழந்தவர்களுக்காக ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய வீடுகளை கட்டி வழங்கும் பணியை மேற்கொண்டுது
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் ஸ்ரீவைகுண்டம், செம்பூர், நாணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒன்றாக நாளை வழங்கப்பட உள்ளன.
7 லட்சம் மதிப்பீட்டில் வீடு வழங்கும் நிகழ்ச்சி;
வீடு வழங்கும் இந்நிகழ்ச்சி நாளை (அக்டோபர் 10) நடைபெறவுள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு வீடுகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியை அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட தலைவர் சிந்தாரங்கதன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.நிகழ்ச்சியில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.என பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஆர். ஜெயக்குமார் தெரிவித்தார்.


