தூத்துக்குடி, அக்.7 –எவ்வளவு நெருக்கடியை கொடுத்தாலும் பாஜகவின் கனவு தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது என மீன்வளம், மீனவ நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். திமுக வக்கீல் அணி மாநில இணைச்செயலாளர் ரவிச்சந்திரன், சட்டத்துறை துணைச்செயலாளர் ராஜா முகமது, தலைமைகழக வக்கீல் மனோஜ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
“2026 சட்டசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும். அதற்காக நாம் இப்போதே களப்பணிகளை துவங்க வேண்டும். பீகார் தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் எம்.பி. கூறியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்க திமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வக்கீல் அணிகள் செயல்பட்டு, தவறுகள் ஏதுமில்லாமல் கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார், ரூபன், ஜெபதங்கம் பிரேமா, ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணகுமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சதீஷ்குமார், கோட்டாளம், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், ஒன்றிய துணைச்செயலாளர் நாராயணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், பாரதிராஜா, பேரூர் ஒன்றிய வக்கீல் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

