December 1, 2025
#திருநெல்வேலி மாவட்டம்

பாஜக மகளிர் அணி தகவல் தொடர்பு – சமூக ஊடக பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னபூர்ணா .வ.உ.சி. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

திருநெல்வேலி,  கப்பலோட்டிய தமிழன் சுதேசிய  விதையை வித்திட்ட தென்னகத்தில்  தோன்றிய  இந்திய விடுதலை தலைவர்  சிதம்பரனார்.நம் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமின்றி, அந்நியரால் இரட்டை ஆயுள் தண்டனையையும் அனுபவித்து, சிறையிலே செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டான இந்த ஆண்டில் அன்னாரின் 85-வது நினைவு நாளானது, தியாகத் திருநாள்’ ஆகக் கடைபிடிக்கபடுகிறது. அத்தகையாக நாளான இன்று

பாஜக மகளிர் அணி தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னபூர்ணா பிள்ளை அவர்கள்  திருநெல்வேலியில் உள்ள வ. உ. சி. மணிமண்டபத்தில் அவரது திருஉருவச்சிலைக்கும் பின்னர் சிந்துபூந்துறையில் உள்ள அவரது திருவுருவ படத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் இலவச சோலை வழங்கினார் இதில் பாஜகவினர் மற்றும் வஉசி பேரவைஅமைப்பினர் மற்றும் வெள்ளாளர் முன்னோற்ற அமைப்பினர் உடன் இருந்தனர்.