December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

பஜ்ரங் தள் அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முதல்வருக்கு கோரிக்கை.

தூத்துக்குடி சிறுபான்மை துறை மாநில மாவட்ட மற்றும் புதிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் மாநகர மாவட்ட தலைவர் மைதீன் தலைமை தாங்கினார்.

சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய சிறுபான்மை பிரிவு வளர்ச்சி குறித்து கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவினை வளர்ப்பது குறித்து இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் விரைவில் தேர்வு செய்யப்படும்;

பின்னர் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரிப் கூறுகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நேர் கானல் நடைபெற்றது புதிய நிர்வாகிகள் விரைவில் அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்படுவார்கள் இதுவரைக்கும் காங்கிரஸ் மாவட்டங்கள் 77 மாவட்டங்கள் உள்ளது இதில் 60 மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இன்னும் 17 மாவட்டங்கள் உள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவில் ரயிலில் 72 வயது இஸ்லாமியர் மாட்டு இறைச்சி வைத்திருந்த காரணத்திற்காக கொடூரமாக தாக்கப்பட்டார். அதில் மூவரை மட்டும் கைது செய்து, அவர்களுக்கும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இது தவறான முன்னுதாரணம் இதற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறோம் புகார் அளித்திருக்கிறோம் கண்டிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். அதுபோன்று தமிழகத்தில் புதுக்கோட்டையில் மாடு ஏற்றி சென்ற வாகனத்தை வழிமறித்து பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கியுள்ளனர். இதில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். பஜ்ரங் தள் அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.