தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டிகளுக்கு, மண்டல அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வானவர்களுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது .
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இப் பயிற்சி முகாமிற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்ப ரகு, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள்.
தூத்துக்குடி தெற்கு ராமஜெயம், திருநெல்வேலி மத்தி வில்சன் மணிதுரை, கிழக்கு ஜான் ரபிந்தர், மாநகர் கருப்பசாமி கோட்டையப்பன், கன்னியாகுமரி மேற்கு ஜெகநாதன், கிழக்கு அகஸ்தீசன், தென்காசி தெற்கு கிருஷ்ணராஜா, வடக்கு முகேஷ், ராமநாதபுரம் சம்பத் ராஜா,மாநகர அமைப்பாளர்கள்.தூத்துக்குடி அருண் சுந்தர் நாகர்கோவில் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளர் சி.எம்.மதியழகன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் இருந்து பேச்சுப் போட்டிக்கு தேர்வானவான இளைஞர் இளம்பெண்களுக்கான பயிற்சி முகாமில் பயிற்சியாளர்களாக கடலூர் புகழேந்தி, வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, எஸ்.கே.பி.கருணா, மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி, கவிஞர் சல்மா, வரவனை செந்தில், ராஜா கம்பீரன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கினர்,
பயிற்சியாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசி போட்டியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.கே.பிரதீப், ஜோசப் அமல்ராஜ், பாரதி, மகேந்திரன், மாநகர துணை அமைப்பாளர்கள் செல்வின் சிவகுமார், ஐ.ரவி, டி.டி.சி.ஆர்.பிரவின், சங்கரநாராயணன், உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் முகாமில் பங்கு பெற்றனர்.
முகாமில் பங்கு பெற்ற போட்டியாளர்கள், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் காலையும் மதியமும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.

