தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ 2024-ல் இந்துசமய அறநிலையத்துறையின் கீழமைந்த, விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முதுமுனைவர் ஐயப்பன், முனைவர் பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் பிரிவில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் முனைவர் பார்த்தசாரதிக்கு சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் பாடல்களை கும்மி பாடல்கள் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு சென்றதற்காக சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பெயரில் விருதும்,1 சவரன் பொற்பதக்கமும் வழங்கப்பட்டது.அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் ஐயப்பன் மற்றும் விருது பெற்ற பேராசிரியர் பார்த்தசாரதி ஆகியோர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-வை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

