தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக பொதுஉறுப்பினா்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஓன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.
சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி தமிழக முதலமைச்சர் ஆட்சியில் தமிழர்கள் நலன், மாநில வளர்ச்சி உள்ளிட்ட அத்தனை திட்டங்களையும் எல்லா துறைகளிலும் நிறைவேற்றுவதால் இந்தியாவில் நம்பர் ஓன் மாநிலமாகவும், நம்பர் ஓன் முதலமைச்சருமாகவும் தளபதியார் விளங்குகிறார்.
கழக வளர்ச்சி பணிதான் எல்லோருக்கும்முக்கியம் முதலமைச்சாின் சாதனைகளை ஓவ்வொரு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம் ரூ1000 உாிமைத்தொகை கல்லூாி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பள்ளியில் காலை உணவு திட்டம் என எல்லா வகையிலும் சாதனை தொடர்கிறது.
முதலமைச்சர் வௌிநாடு சென்று பல முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கின்றது, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டு நலனில் அக்கறையுடன் பணியாற்றுகிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கனிமொழி எம்.பி எல்லோரும் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம்ஆகிய தொகுதிகளிலும் வெற்றி உறுதி. முதலமைச்சர் 200 தொகுதியை நிர்ணயம் செய்துள்ளார். நாம் அனைவரும் திட்டமிட்டு முறையாக பணிகளை மேற்கொண்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் அதற்கு அனைவரும் சபதம் ஏற்கவேண்டும். என்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, தர்மலிங்கம், சிவகுமாா், ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர் கணேசன், பொருளாளர் மாாியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, சக்திவேல், சட்டமன்ற தொகுதி உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற அமைப்பாளர் பாாி, ஓன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, கிளைச்செயலாளர்கள் காமராஜ், வேல்ராஜ், சந்திரசேகா், அந்தோணி பென்சிகர், பொன்னுச்சாமி, மகாராஜா, மாாியப்பன், முத்துக்குமரன், சேவியா், பூசாாிமுருகன், பிரபாகர், சரவணன், ஜெயபாண்டி, ஜெயசீலன், இசக்கி என்ற செல்வம், ராயப்பன், முருகன், ரத்தினகுமாா், பழனி, காசி, கருப்பசாமி, ஆனந்தராஜ், ஜெபராஜ், மகளிர் அணி அங்காளஈஸ்வாி, சண்முகத்தாய், சிவபாலா, நூர்ஜஹான், செயின்அம்பு, இளைஞர் அணி ஆனந்த் கௌதம் சுந்தா், விமல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அனந்தகுமார் மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

