| தூத்துக்குடியில் பழமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் |
தூத்துக்குடி வடக்கு பீச் ரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பங்களா முகாம் அலுவலகம் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய சிந்தாதிரை மாதா ஆலயம் உள்ளது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மீனவர்கள் மற்றும் அப்பகுதி மீனவ சமுதாய மக்களும், கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் வழிபட்டு வரும் பழமை வாய்ந்த தூய சித்தாத்திரை மாதா ஆலயத்திற்கு அரசு பட்டா வழங்கி மற்றும் பொதுப் பாதையை வகுத்து தர கோரியும் தூத்துக்குடி குருஸ்பரம் புனித சூசையப்பர் ஆலய பங்கின் மூலம் நடத்தப்படும் ஆலய வழிபாட்டிற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம் பகவத்திடம் கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனீஸ் பிரபு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா. சுதாகர், முன்னாள் துணை மேயரும் தூத்துக்குடி கிழக்குப் பகுதி செயலாளருமான சேவியர், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜெ.தனராஜ் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், சரவணகுமார், ஜில்லு ரமேஷ், வட்ட செயலாளர் ஐடி விங் சொக்கலிங்கம், முள்ளக்காடு ஸ்ரீராம், சிவகுமார் மகளிர்கள் இந்திரா, ஷாலினி, மற்றும் பால ஜெயம் சகாயராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

