December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு இ.பி.எஸ் வருகை, சிறப்பான வரவேற்பு வழங்க அதிமுக வர்த்தகர் அணி தீர்மானம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணம் மேற்க்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு வழங்க முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் வேண்டுகோள்.


தூத்துக்குடி, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற லட்சிய பயணத்தை தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகிறார். 01.08.25 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு, தூத்துக்குடி நீதிமன்றம் எதிரில் கனி பேலஸ் அருகில் உள்ள கைலாஷ் மஹாலில் வைத்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கூறுகையில்;

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நான்காண்டு காலம் நல்லாட்சி புரிந்த எடப்பாடியார் தலைமையில் 2026ல் சட்டமன்ற தோ்தலை சந்தித்து மீண்டும் அதிமுக ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். இந்த கூட்டம் போட்டி கூட்டம் அல்ல விலைவாசி உயா்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு .என பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டி காட்டி இப்போதிலிருந்தே நம்முடைய தோ்தல் பணி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து 6 தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக 100 சதவீதம் வெற்றியை பெற வேண்டும் என சி.த.செல்லப்பாண்டியன் பேசினாா்.

கூட்டத்தில் வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆனந்தராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், வர்த்தகஅணி துணை செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் சிவசாமி வேலுமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், துணை செயலாளர் சந்தானம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம், மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், முன்னாள் தொகுதி செயலாளர் புகழும் பெருமாள், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் லிங்க குமார், மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின், எட்வின் பாண்டியன், சகாயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், துணை தலைவர் ரத்தினம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், சுயம்பு, அருண்குமார் அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் சாந்தி போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், ராஜேந்திரன் பேச்சியப்பன் தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா உள்பட பலா் கலந்து கொண்டனர்.