தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார கூட்டம் 14.07.25 அன்று தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு சண்முகபுரம் பகுதி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யகாந் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், ஐ.ரவி, முகமது ஜெயலாப்தீன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வ சுபாஷ், காஜா முகைதீன், ஆலிவர் அலாய் ஸ்டெபின், முகமது பாசில், பெத்து கணேஷ், பால செல்வகுமார், ஈன முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை ஆற்றினர். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;
முத்தமிழ் அறிஞர் கலைஞரால் தமிழ்நாட்டுக்கு, மொழிக்கு, தமிழக மக்களுக்கு வளர்ச்சி கிட்டியது அதை மறுக்க முடியாது. நமது முதலமைச்சர் தளபதியார் கலைஞர் வழியிலே எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
அவருடைய சாதனைகளால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கிறது. இதனை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.வறுமை கோட்டு பட்டியலில் உள்ளவங்க தமிழ்நாட்டில் மிக குறைவு, சிசு மரணம் தமிழ்நாட்டில் மிகவும் குறைவு, அதை போல் தமிழ்நாட்டில் தனிநபரின் வருமானம், உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெண்கள் அதிக அளவில் தொழில் முனைவோராக உள்ளனர். தமிழ்நாட்டில் உழைக்கும் மகளிர்கள் 41% சதவீதம் இருக்கிறோம். இப்படி தமிழ்நாட்டின் சாதனைகளை சொல்லி கொண்டே போகலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்நோக்கு உயர் மருத்துவ முகாம்;
மேலும் ஒரு சிறப்பு திட்டமாக ஜூலை கடைசி வாரத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்நோக்கு உயர் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் இருதயம், சிறுநீரகம், மூளை, புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். நாம் அனைவரும் இணைந்து இந்த மருத்துவ முகாம் பற்றிய தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். முதலமைச்சரின் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் தமிழன் உலகமெங்கும் பரவி இருக்கிறானே சுயமரியாதையுடன் வாழ்கிறானே, இதனை அழிக்க ஒழிக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது. பாஜக அரசின் ஒரே கொள்கை மீண்டும் தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சி பொறுப்புக்கு வரவிடக்கூடாது. நம்முடைய தளபதியார் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதே பாஜக அரசின் ஒரே இலக்கு, இதற்காக பல பொருந்தாத கூட்டணிகளை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த பாஜக அதிமுக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.ஆகவே நாம் அத்தனை பேரும் தமிழ்நாட்டை பாதுகாக்க மீண்டும் இந்த முறையும் நாம் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற முறையிலே நம்முடைய பிரச்சார பயணத்தை தொடங்குவோம் தலைவர் தளபதி ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பொருளாளர் சுசீ.ரவீந்திரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கலைச்செல்வி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தலைமைக் கழக பேச்சாளர்கள் சரத் பாலா, இருதயராஜ், இளம் பேச்சாளர் சஞ்சய், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டச் செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ், மனோ மரியதாஸ், மாரீஸ்வரன், கதிரேசன், கருப்பசாமி, சிங்கராஜ், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி அம்மாள், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், மாவட்ட பிரதிநிதி ஏசுவடியான், பிடிஎம்எஸ் தலைவர் சுப்பிரமணியன் சண்முக புரம் பகுதி பிரதிநிதிகள் சார்பு அணி அமைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், நன்றி கூறினார்.

