தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களாகவும். 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர்கள்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி காலனி தோல் பொருட்கள் உற்பத்தி தோல் பதனிடும் தொழிலாளர்கள், பொற்கொல்லர், ஓவியர், மண்பாண்ட தொழிலாளர்கள், சாலையோர மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர், வீட்டு மற்றும் நிறுவனங்களில் பராமரிப்பு பணி தொழிலாளர்கள், சமையல் மற்றும் உணவு விநியோக தொழிலாளர் மற்றும் ஓட்டுநர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
வாரியத்தில் பதிவு செய்ய வரும் போது வயது சான்றுக்கான பள்ளி, பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வரவும், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம், அலைபேசி இணைக்கபட்ட ஆதார் அட்டை, நியானதாரர் நாமினி ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும்.மேலும் அசல் ஆவணங்களை ஆய்வுக்காக எடுத்து வரவும். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் எனில் பேட்ஜ் எண் உள்ளவாறு இருக்கும் ஓட்டுநர் உரிமம் வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்தவர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, விடுதிக் கட்டணம், திருமண மற்றும் மகப்பேறு நிதியுதவி, 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம், பணியிடத்தில் எதிர்பாராமல் மரணம் அடைபவர்களுக்கு நிதியுதவி பணியிடத்தில் விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிதியுதவி, பெண் மற்றும் திருநங்கை ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெறலாம் என்பதால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கீதாஜீவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


