மக்களின் நலனுக்கான மோடி அரசின் வரப்பிரசாதம் – GST 2025
மாநில அமைப்பாளர், மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாஜக – A. அன்னபூர்ணா
மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மீண்டும் நிரூபித்துள்ளது – “மக்களுக்கே அரசின் சக்தி” என்று. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், GST 2025 சீர்திருத்தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பெரிய தீர்மானமாகும்.
பொதுமக்களுக்கு நேரடி நன்மை 25க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் வரி விலக்கு. சிறு வியாபாரிகள் ஒரு மாநிலத்தில் பதிவு செய்தாலே போதும் – நாடு முழுவதும் வியாபாரம் செய்யலாம்.
கைவினைப் பொருட்கள், கைத்தறி, தோல், பளிங்கு பொருட்கள் அனைத்தும் 5% ஜிஎஸ்டி-க்கு மட்டுமே.
👉 இது மக்களுக்கான உண்மையான நிவாரணம்; காங்கிரஸ் ஆட்சி செய்யாத காரியத்தை மோடி அரசு செய்துள்ளது.
நெசவாளர்களுக்கு வரலாற்று வெற்றி
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் → நூல், நார் அதிக வரி; துணிக்கு குறைந்த வரி. இதனால் நெசவாளர்கள் பாதிப்பு, குடும்பச் சுமை அதிகம். இன்று மோடி அரசு → அனைத்திற்கும் ஒரே 5% ஜிஎஸ்டி. திருப்பூர், ஈரோடு, சூரத் போன்ற நெசவு நகரங்கள் புதுச்சிறப்புடன் எழுச்சி பெறும்.
👉 ஆடைகள் மலிவாகும் – நெசவாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி மலர்கிறது.
🌍 ஏற்றுமதியாளர்களுக்கு பொற்காலம்
முன்பு → GST ரிபண்ட் மாதக்கணக்கில் தாமதம். இப்போது → 90% ரிபண்ட் சில வாரங்களில்.IT/ITES, Software exports → மீண்டும் ஏற்றுமதி வகையில்.
சிறு ஏற்றுமதியாளர்கள் கூட Amazon, Flipkart வழியாக உலக சந்தையில் காலடி எடுக்கலாம்.
👉 இந்தியா உலக வணிகத்தில் வலுவாக நிற்கும் சக்தி – மோடி அரசின் பரிசு
📊 மக்களுக்கு விளையும் பலன்கள்ஆடை விலை குறையும் – குடும்பச் செலவு குறையும். சிறு வியாபாரிகள் சுமை குறையும் – வளர்ச்சி அதிகரிக்கும்.ஏற்றுமதி உயர்வு, வெளிநாட்டு வருமானம் அதிகரிக்கும்.இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இது சாதாரண பொருளாதார சீர்திருத்தம் அல்ல;
👉 இது மோடி அரசின் மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு.
👉 இது பாஜக அரசு மட்டுமே செய்யக்கூடிய துணிச்சலான முடிவு.
மக்களின் நலனுக்காக – இந்தியா வளர்ச்சி பாதையில் – பாஜக அரசின் GST 2025 என்றென்றும் நினைவுகூரப்படும்!

