நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி சந்தியா பயின்று வருகிறாா்.
மாணவி சந்தியா இம்மாதம் 9-ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் வைத்து அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில், 2-வது இடம் பெற்று ரூ, 3 ஆயிரம் பரிசு தொகையையும், ஆக18-ல் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பெரியார் மையத்தில் வைத்து நடைபெற்ற பேச்சு போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூ.3 ஆயிரம் பரிசு தொகையையும் பெற்றாா்.
இதே போன்று கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு தூத்துக்குடி ஸ்ரீ லட்சுமி மஹாலில் வைத்து நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் தேர்வாகி ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றார்.
இதில் வெற்று பெற்றதன் காலணமாக மாநில அளவில் நடைபெற உள்ள பேச்சுப்போட்டிக்கு மாணவி சந்தியா தேர்வாகியுள்ளார்.

மாநில அளவில் பேச்சுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி சந்தியாவை கல்லூரி முதல்வர் ராமலிங்கம் பேராசிரியர்கள் கிரேஷாஜேக்கப், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் லீலா,உடற்கல்வி இயக்குனர் ஆல்டிரின் மற்றும் நிர்வாக அலுவலர்கள்,மாணவ மாணவியர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

