விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின்பு 4 பேர்கள் கைது .
கடந்த 2018 டிசம்பர் மாதம் சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் இறந்த நபர் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் பொன்னுச்சாமி என்ற குமார் (42)என்பது தெரியவந்தது.
வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கடந்த 2025 பிப் மாதம் விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர்கள் சண்முகம்செல்லத்துரை, கார்த்திக்ராஜா, சரவணக்குமாா்,காா்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள், ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையின் முடிவில் விளாத்திகுளம் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணுச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (எ) கோடாங்கி(64), இம்மானுவேல் மகன் கருப்பசாமி(40)சிவதாசன் மகன் ராஜராஜன்(36), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமகிருஷ்ணன் (55)ஆகியோர் மதுபானம் அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக பொன்னுச்சாமி(எ)குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.இதனையடுத்த 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையில் திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் பாராட்டுகளை தெரிவித்தார்.

