தூத்துக்குடி ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டங்களின் சார்பில் “மதச்சார்பின்மை காப்போம்” பேரணி தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட விசிக அலுவலகத்தில் 16.07.25 அன்று மாலை நடைபெற்றது. விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில், தெற்கு மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குரு பிரசாத், அர்ஜுன், மண்டல துணைச் செயலாளர் டேஞ்சர் மோட்சம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளர்களாக விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் தமிழ் குட்டி கலந்து கொண்டனர். மத்திய மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பேசுகையில்; ஜுன் 14 அன்று திருச்சி மாநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி, தலைமையில் நடைபெற்ற
மதச்சார்பின்மை காப்போம்:
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து “மதச்சார்பின்மை காப்போம்” எழுச்சி பேரணியில்” நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் குறித்த விளக்க பொதுக் கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்த வேண்டும் என்ற தலைமையின் உத்தரவிற்க்கிணங்க, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டம் குறித்தும் திருச்சி “மதச்சார்பின்மை காப்போம்” பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் பொதுமக்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மை சொந்தங்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் எடுத்துக் கூறி “மதச்சார்பின்மை காப்போம்” பேரணி தீர்மான விளக்க பொதுக் கூட்டங்களை எந்தெந்த வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். இதற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, முகாம் விசிக நிர்வாகிகள் தங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும். அதோடு சிறுபான்மையினர், பொதுமக்களை சந்தித்து அணிதிரட்டி பெருமளவில் பங்கேற்க்கச் செய்யது, எழுச்சித்தமிழர் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம் ஒன்றிய மோடி கும்பலின் முகத்திரையை கிழித்தெறிவோம், கொள்கை வெல்ல களமாடுவோம் என வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் சமத்துவ வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சார்லஸ், செந்தில் வேல், முனீஸ் குமார், மத்திய மாவட்ட நிர்வாகிகள் மீனவரணி அமைப்பாளர் ஜான்சன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அஜீஸ், ஊடக மையம் நிர்வாகி முத்துக்குமார், தொண்டரணி மகேந்திரன், மகளிர் அணி நிர்வாகி முருகேஸ்வரி, முகாம் செயலாளர்கள் மாடசாமி, ஆறுமுகம், சந்தனகுமார், குட்டி, வடக்கு மாவட்ட தொகுதி துணை செயலாளர் சடையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்
.

