By,Suresh Kumar
கோவில்பட்டி கிளை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பிறந்தநாள் விழா கோவில்பட்டி ராமசாமிதாஸ் நினைவு பூங்கா வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
தலைவர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் ஜெகநாதன், பொருளாளர் கண்ணகி, கதை எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி, இலக்குமி ஆலை துவக்கப்பள்ளி கிழக்கு,இலக்குமி ஆலை மெட்ரிக் பள்ளி,கஸ்தூரிபா நர்சரி பள்ளி, சி கே டி. மெட்ரிக் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்கு திட்டங்குளம், கவுனியன் மெட்ரிக் பள்ளி 50 மாணவ மாணவியர்கள் பங்கு பெற்று அழ வள்ளியப்பாவின் குழந்தைகள் பாடல்களை பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கதை சொல்லும் வழிமுறைகள் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இரண்டு கதை எழுதும் சிறார்கள் இனம் கண்டு பாராட்டப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன. சங்க ஆலோசகர் மேனாள் ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

