2026 தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் பாஜக வியூகம் பரப்பும் திட்டம்,தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி, செப்.19 -2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது தேர்தல் வியூகங்களை மக்கள் மத்தியில் வலுவாக கொண்டு செல்லும் திட்டத்துடன் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு மண்டலத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் வடக்கு மண்டல தலைவர் திருமதி. சுதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிளைத் தலைவர்கள் அனைவரும் நேரில் சந்தித்தனர். மக்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு தீர்வுகளை வழங்கும் முயற்சிகள், பாஜக வாக்குறுதிகளை வீடு வீடாக கொண்டு செல்லும் திட்டம், சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்களை அணுகும் வழிமுறைகள் ஆகியவை ஆலோசனையில் விரிவாக பேசப்பட்டன.
மேலும், பாஜக பாரபட்சமற்ற அரசு தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செய்துள்ள சாதனைகள், மத்திய நிதி ஒதுக்கீடுகள், வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து மக்களிடம் எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான வியூகம் வகுக்கப்பட்டு, தொண்டர்கள் மக்களிடையே நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உரையாற்றும்போது;
“2026 தேர்தலில் பாஜக வெற்றி பெற மக்கள் மத்தியில் நமது மோடி அரசு செய்த சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்து சொல்லவேண்டும் ஒவ்வொரு குக்கிராமத்திற்கு வழங்கிவரும் மோடி அரசு கிராம புறத்திட்டங்களை ஒவ்வொரு தொண்டரும் மக்களை நேரடியாகச் சந்தித்து, கட்சியின் கொள்கைகளையும் மக்களுக்கு அளித்துள்ள நன்மைகளையும் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், மாவட்ட பொருளாளர் கே.என்.ஆர். பரமசிவம், ராஜேஷ், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் காளிராஜா, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் குருமூர்த்தி, தரவு தள மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், முன்னாள் வடக்கு மண்டலத் தலைவர் சிவராமன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஜெயக்குமார், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சக்திவேல், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, ஆன்மீகப் பிரிவு மாவட்ட செயலாளர் வெள்ளத்தாய், மருத்துவர் அணி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, 2026 தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க மக்கள் மத்தியில் மோடி அரசு செய்த நலத்திட்டங்களை தீவிரமாக பரப்புவோம் என்ற உறுதியை வெளிப்படுத்தினர்.

