December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் தந்தை பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி, பெரியார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தூத்துக்குடி,திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் முழுவுருவச் சிலைக்கு, அவரது 147வது பிறந்தநாளையொட்டி  சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

.நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், மண்டலத் தலைவர் வக்கீல் பால குருசுவாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், ரமேஷ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், அணி தலைவர்கள் பழனி, அருண்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், முருக இசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, துணை அமைப்பாளர்கள் சேசையா, ஐ.ரவி, சத்யா, சாகுல்ஹமீது, ரூபராஜா, மகேஸ்வரன்சிங், நலம் ராஜேந்திரன், செந்தில்குமார், பால்ராஜ், செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், கருப்பசாமி, செல்வராஜ், மூக்கையா, செல்வராஜ், முனியசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், விஜயகுமார், மார்ஷலின், இசக்கிராஜா, பட்சிராஜ், பகுதி பிரதிநிதி பிரபாகர், மற்றும் நிர்வாகிகள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பிரதிநிதிகள் பாஸ்கர், துரை,குமார், மற்றும் செல்வி, துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.