December 1, 2025
#தூத்துக்குடி

ஏஐ தொழில்நுட்பம் அனைவருக்கும் தேவையானது, பயிற்சியை துவக்கி வைத்து கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக வசதிக்கு உதவிடும் வகையில் மக்களின் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கானவும் செயற்கை நுன்னறிவு ஏஐ திறன்பயிற்சி அம்பேத்காா் நகாில் உள்ள ஸ்டெம்பாா்க் கலையரங்கில் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்து பேசுகையில்;

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு ஏஐ போன்றவா்.

இப் பயிற்சியை திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தொடங்கி வைத்து பேசுகையில்;

 தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். முதன் முதலில் கணினி பயன்பாட்டுக் கொள்கையை வகுத்து திட்டத்தை கொண்டு வந்தவா் முன்னாள் முதலமைச்சர் கலைஞா்தான். செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்திற்கு அனைவருக்கும் தேவையான ஓன்று பல்வேறு பயனுள்ள தெளிவான தகவல்களை ஏஐ மூலம் அறிந்து பின்னா் ஓரு முடிவை எடுக்க இத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு ஏஐ போன்றவா். அவா் பல தரப்பினரிடமும் தன்னுடைய கருத்துக்களை கேட்பாா் படிப்பார் பின்னர்தான் ஒரு முடிவு எடுப்பாா். இதே போன்று இந்த தொழில்நுட்பத்தை எவ்வித தயக்கமின்றி மக்கள் பிரதிநிதிகள், பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது மக்களின் குறைகளை விரைந்து தீர்வு கண்டு நிறைவான பணிகளை நம்மால் செய்ய முடியும். ஆனால் எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் மனித அறிவுக்கு ஈடு இணையாகாது. இறுதியில் மனிதனுடைய முடிவுதான் இறுதியானது. என கனிமொழி பேசினார்

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் செயற்கை நுன்னறிவு பற்றி பயப்பட வேண்டியதில்லை. அலுவலர்கள், மாணவர்கள், பல்வேறு தொழில் துறையினர் என எல்லோருக்குமானது செயற்கை நுன்னறிவு பற்றிய விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை. மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் செயற்கை நுன்னறிவு பற்றி எடுத்துக் கூறுங்கள் என்றார் 

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்; மாநகராட்சியை பொறுத்தவரை எல்லா பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வரும் நிலையில், நிர்வாகமும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாமும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறவேண்டியது உள்ளது. எதிர்கால தலைமுறையினா் நலன் கருதியும், காலத்தின் அருமை கருதி மாறியாக வேண்டும். ஏ ஐ தொழில்நுட்ப பயிற்சியை மக்கள் சேவைகளுக்கு பயன்படுத்த நாம் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று மேயர் பேசினார்

கூட்டத்தில் ஆணையா் பிாியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலா்கள் நாகேஸ்வரி, மார்ஷலின், தெய்வேந்திரன், கீதா முருகேசன். ரெங்கசாமி, இசக்கிராஜா, சுரேஷ்குமாா், விஜயகுமார், ஜாக்லின் ஜெயா, ஜெயசீலி, வைதேகி, சரவணகுமார், ராஜேந்திரன், சுப்புலட்சுமி, காந்தி மணி, பட்சி ராஜ் , பொன்னப்பன், முத்துவேல், சந்திரபோஸ், கற்பகனி, மாநகராட்சி நகரமைப்பு திட்ட உதவி செயற்ப் பொறியாளா்கள் காந்திமதி, முனீர் அகமது. உதவி பொறியாளர் சரவணன், நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் இந்திரா நகர் பகுதி திமுக செயலாளர் சிவக்குமாா், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், லிங்கராஜா, ஜேஸ்பா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டார்