December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுப்பிக்கப்பட்ட அண்ணா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்‌. 

இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்; தூத்துக்குடி மாநகரை தூய்மையான பசுமை மாநகராக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, மாநகர மக்களின் தேவைகளை அறிந்து சாலை , வடிகால், பூங்கா உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை புதிதாக உருவாக்கியும், பழமை மாறாமல் மேம்படுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில், பயணிகள், பொது மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து, பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அப்பொழுது அங்கிருந்த மக்கள் முதலுதவி மையம் ஒன்று அமைத்து தரக் கோரியும், கூடுதலான மின் விளக்கு வசதிகள் அமைத்து தருமாறும் கேட்டனர். மக்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, கோரிக்கைகளை வரும் நாட்களில் நிறைவேற்றி தருவதாக கூறினார். பின்னர் பேருந்து நிலையத்தில் கழிவறைகள், கடைகள், பயணிகள் உட்காரும் இடம் உட்பட அனைத்து பகுதிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.

உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.