December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரில் சுகாதார பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆய்வு கூட்டத்தில் மேயா் ஜெகன் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் சுகாதார துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன்பொியசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேயர் பேசுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்று வரும் சுகாதாரம் மற்றும் அடிப்படை தூய்மை பணிகள் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக மழைகாலம் ஆரம்பமாக இருப்பதால் மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் சுகாதாரத்தை பேணி பாதுகாத்து,நோய் தொற்றுக்கள் உருவாகத வகையில் குப்பைகள் தேங்காத வண்ணம் தினசாி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொற்று நோய்கள் ஏதுவும் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகர சுகாதாரத்துறை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு முன்மாதிாியாக தூத்துக்குடி மாநகராட்சி செயல்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைவருடைய ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறோம் இதற்கு மேலும் வலுசோ்க்கும் வகையில் சுகாதாரத்தையும் இயற்கையையும் பேணி பாதுகாத்து தூய்மையான பசுமையான மாநகராட்சியாக உருவாகுவது மட்டுமின்றி, மாநகர மக்களின் நலனும் முக்கியம் என்பதை முழுமையாக கவனத்தில் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் பிாியங்கா, நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ராஜபாண்டி, ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், கண்ணன், நெடுமாறன், உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டார்