தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போத்தி விநாயகர் கோயில் சதுர்த்தி விழா மற்றும் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தர்மகர்த்தா என்.பி.ராஜா, தொழிலதிபர் என்.பி.அசோக் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக 42 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு வகித்த முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அண்ணாச்சி என்.பெரியசாமி நினைவு திடலில், அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக என்.பெரியசாமி குடும்பத்தினருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்தனர். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தர்மகர்த்தா என்.பி.ராஜா, தொழிலதிபர் என்.பி.அசோக் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டலத் தலைவர் அன்னலட்சுமி, கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர் முன்னாள் கவுன்சிலர் அ.முத்துச் செல்வம், தொமுச பேச்சிமுத்து, ரத்தினசாமி மற்றும் வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், ஆலய கமிட்டி செயலாளர்கள் செல்வகுமார், செல்வராஜ், வேலுச்சாமி, மாமன்ற கீதா முருகேசன், ரவீந்திரன், ஜீவானந்தம், ரத்தினசாமி மற்றும் மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராமர், பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, வர்த்தகரணி வேல்பாண்டி, ஆவுடையப்பன் மற்றும் போத்தி விநாயகர் கோவில் கமிட்டி மெம்பர்கள், ஆலய இளைஞர் அணி நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

