December 1, 2025
#செய்தி

பெரியாா் விருதிற்கு தேர்வாகியுள்ள எம்பி கனிமொழிக்கு – வசந்தம் ஜெயக்குமாா் வாழ்த்து

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பெரியார்’, ‘அண்ணா’, ‘கலைஞர்’, ‘பாவேந்தர்’, ‘பேராசிரியர்’, ‘மு.க.ஸ்டாலின்’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

திமுக முப்பெரும் விழா, வரும் செப்.17-ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளான பெரியார் விருது திமுக துணைப் பொதுச்செயலாளரும் – திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.இந்நிலையில் எம்பி கனிமொழியை மாநில நெசவாளர் அணி துணை செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..