| தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் 28 வருடத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பொியசாமி தகவல். |
தூத்துக்குடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொழுதுபோக்கும் விதமாகவும் மாநகரை சீராக்கும் வண்ணமாகவும் மக்களின் கோரிக்கையின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பொியசாமி எடுத்து வருகிறாா். மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற நாள் முதல் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, வடிகால் தெரு விளக்கு வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகரை அழகுபடுத்தும் வகையில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிவன்கோவில், பெருமாள் கோவில், மாாியம்மன் கோவில், முத்தராம்மன் கோவில், மேலூா் பத்திரகாளி அம்மன் கோவில் ஆகிய வழிபாட்டுத்தலங்கள் நிறைந்த பகுதியில் உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள், பக்தர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். 1997ம் ஆண்டு அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த இரா. ஹென்றி தெப்பக்குளத்தை சீரமைத்தார்.
இந்நிலையில் தெப்பக்குளத்தை எந்தவகையில் நவீன வசதிகளுடன் எப்படி சீரமைக்கலாம் என்று பல கட்டங்களாக அதிகாரிகளுடன் மேயர் ஜெகன் பொியசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து மேயர் ஜெகன் அதிகாரிகளுடன் தெப்பக் குளத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு அதிகாரிகளிடம் எந்த வகையில் சீரமைக்கலாம் என்ற விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் மேயர் கூறுகையில்;
தெப்பக்குளத்திற்குள் “எக்காரணத்தைக் கொண்டும் கழிவு நீர், மழை நீர் வரக்கூடாது..
மேலும் பொதுமக்கள் சிறுவர்கள் இரவு நேரத்தில் பொழுது போக்கும் வகையில் அம்சத்தை உருவாக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்பு தெப்பக்குளம் பகுதி முழுவதும் சுற்றிப் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, தெப்பக்குளம் பகுதி முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும். நவீன உயர்கோபுர மின் விளக்குகள் பொதுமக்களை கவரும் வகையிலும், தமிழகத்தில் பெரிய மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது போல தெப்பக்குளத்தில் செயற்கை அலங்கார நீர் ஊற்றுகள் அமைக்கப்பட உள்ளது. இது பொதுமக்கள் பொழுது போக்குடன் இயற்கை ரசிக்கும் வகையில் அமையும்.
ஆண்டுக்கு ஓரு முறை நடைபெறும் தெப்பத்திருவிழாவின் போது அலங்கார நீர் ஊற்றுகள் வெளியே எடுக்கப்பட்டு விடும் அதன் பின்பு தெப்பக்குளத்தில் விடப்படும், 28 வருடமாக எந்த ஒரு நகரமன்ற தலைவரும் மேயரும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நிலையில் 50 லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய தெப்பக்குளம் சீரமைக்கப்பட உள்ளது. தெப்பக்குளத்தில் உள்ள நீர் பச்சை கலராக நிறம் மாறுவதால் வாரத்துக்கு ஒருமுறை மோட்டார் மூலம் தெப்பக்குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்படும் மற்றும் தெப்பக்குளத்தில் நீர் நிறம் மாறுவதால் சில நேரங்களில் மீன்கள் இறந்து விடுகிறது ஆகையால் மீன்களையும் முழுமையாக பாதுகாத்து பராமரிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களுக்குபொழுதுபோக்க கிடைத்த வரப்பிரசாதமாக தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு இரண்டு மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.

