கோவில்பட்டி அருணாச்சலம் பேட்டைத் தெரு அறிவுத்திருக்கோவில் சார்பாக, கோவில்பட்டி மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷியின் 115-ஆவது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பேராசிரியர் எம்.விஜி தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் சரமாரிராஜ் முன்னிலை வகித்து மகரிஷியின் திட்ட முறைகளை விளக்கினார். பேராசிரியர் கோமதி, மன்ற அன்பர்களான நாகஜோதி, மகேஸ்வரி ஆகியோர் ஜெயந்தி விழாவை பற்றி உரையாற்றினர்.
மேனாள் ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்தார். பேராசிரியர் சங்கரநாராயண மூர்த்தி மகரிஷியின் அகத்தாய்வு முறைகளை விளக்கி நன்றி தெரிவித்தார்.விழா நிறைவாக கலந்து கொண்ட அனைவரும் பிரம்மஞானப் பாடல் மற்றும் உலக நல வாழ்த்து பாடினர்.


