December 1, 2025
#தூத்துக்குடி

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், முதியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், அமைச்சர் கீதாஜீவன், முதியோர் வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கினார்

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் 12.08.2025 அன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,

தூத்துக்குடி மாநகராட்சி, டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா அருகில் உள்ள நியாய விலைக் கடை அருகில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் வயது முதிர்ந்த பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்கள். தொடர்ந்து, குடிமைப் பொருட்களைக் கொண்டு செல்லும் தாயுமானவர் திட்ட வாகனத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் கலையரசி, துணைப்பதிவாளர் சுப்புராஜ், வட்டாட்சியர் முரளிதரன், வட்ட வழங்கல் அலுவலர் ஞான ராஜ், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள் அந்தோணி பட்டுராஜ், சாம் டேனியல் ராஜ், மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதிகள் கார்த்திகேயன், நாராயணராஜ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ரவிக்குமார், அறங்காவலர் அறிவழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.