தூத்துக்குடி:மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆகஸ்ட் 10 தனது பிறந்தநாளை முன்னிட்டு வசந்தம் ஜெயக்குமார், தமிழக துணை முதலமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு ஆகியோரை அவர் நேரில் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் மூவரும் வசந்தம் ஜெயக்குமாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவரது சமூகப் பணிகள் மற்றும் கழகத்திற்கான பங்களிப்பையும் பாராட்டினர்.
பிறந்த நாளில் மூத்த தலைவர்களின் வாழ்த்து பெற்றது தனக்குப் பெரும் உற்சாகம் அளித்துள்ளதாகவும்,எதிர்காலத்தில் மக்களுக்கான பணிகளில் மேலும் தீவிரமாக செயல்படுவேன் என்றும் வசந்தம் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

