தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குரு பங்காரு அம்மா 85வது அவதார பெருவிழா நடைபெற்றது. மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை திருவிக சக்தி பீட வேள்விக்குழு பொறுப்பாளர் பத்மா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானத்தை மன்ற தலைவர் விஜயலெட்சுமி வழங்கினார். 
மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி எடுத்து ஆன்மிக ஊர்வலமாக வந்தனர். ஆன்மிக ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார்.விழாவில், திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், துணைத்தலைவர் மாரியம்மாள், அம்பாசமுத்திரம் சியாமளா, மன்ற பொறுப்பாளர்கள் ராஜதுரை, சுப்புலெட்சுமி, கற்பகம், சோலையம்மாள், சக்திவேலம்மாள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

