December 1, 2025
#தூத்துக்குடி

நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பங்கேற்பு

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 02.08.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி, மருத்துவ முகாமினை பார்வையிட்டனர்.

பின்னர் முகாமில் கலந்து கொண்ட முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் ஆகியோரிடம் அமைச்சர் கீதாஜீவன் மருத்துவ சிகிச்சையின் வசதிகள், பரிசோதனைகள் குறித்து விசாரித்தார். பல்வேறு  துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்டால்களை பார்வையிட்டார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்களில்உயர் மருத்துவ ஆய்வகச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகின்றன. நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும், உயர் இரத்த அழுத்தம். நீரிழிவு நோய், மின் இதய வரைபடம். எக்கோ. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே முதலியவையும், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும். ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த பொது மருத்துவம். அறுவை சிகிச்சை, இதயவியல் உள்ளிட்ட துறை நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தின் கீழ் அரசு பதிவு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் மட்டுமின்றி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் 40 வயதிற்கு மேற்பட்டோர். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள். வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் தூத்துக்குடி மரு.யாழினி, கோவில்பட்டி மரு.வித்யா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பிரியதர்ஷினி, மாநகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, வட்டாட்சியர் முரளிதரன், தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, கூடுதல் ஆணையர் பிரியதர்ஷினி, தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் காயத்ரி, ரூபி பர்னான்டோ, மற்றும் திமுக மாநில பொறியாளர் அணி இணை செயலாளர் அன்பழகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அசோக், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி அண்ணாதுரை, விளாத்திகுளம் ஸ்ரீதர், மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், இசக்கி ராஜா, கனகராஜ், ஜெயசீலி, வைதேகி, கந்தசாமி, விஜயகுமார் மற்றும் வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகள், பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.