தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது, ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை துவக்கிவைத்து மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளிலும் குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகிறோம். குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது ஒரு சில இடங்களில் 35 ஆண்டு பழமையான குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால். அந்த பகுதிகளில் தற்காலிக பிரச்சனைகள் உள்ளது அது விரைவில் சீர் செய்யப்படும்.
2008ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பாதாள சாக்கடை திட்டத்தை தொடங்கி வைத்தார்.தற்போது இணைக்கப்பட்ட பல வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. பெரும்பாலான வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
24X7 குடிநீர் விநியோகம்
தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் சப்ளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விவிடி சிக்னல் வரை சாலை அமைக்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சியில் குடிநீர் சரியான முறையில் பராமரிக்காத காரணத்தால் குடிதண்ணீர் பத்து ஆண்டுகளாக மக்களுக்கு சரியாக வழங்கவில்லை சில இடங்களில் பழைய குடிநீர் பைப் லைன் ஒன்பது அடிக்கு கீழ் உள்ளதால் பணிகள் நடைபெறுவதில் சில சிரமங்கள் ஏற்படுகிறது.
| உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது இந்த முகாம் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது. அதில் பெறப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. |
மேலும் முதலமைச்சரின் “நலன் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி தூத்துக்குடி மாநகரில் மூன்று இடத்தில் நடைபெறுகிறது. 2ம் தேதி மில்லர் புரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் தகவலை தெரிவிக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்கான வசதியுடன் பரிசோதனை செய்யப்படும்.
இதுவரை மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சாலைகள் அமைக்கப்பட்டு 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் காலங்களில் மாநகராட்சி பகுதியில் புதிதாக 974 சாலைகள் 60 வார்டு பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளது. பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியும் நடைபெறவுள்ளது. மாநகர பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காது யாரும் பயப்பட வேண்டாம், சிறு குறு தெருக்களுக்கு ஏற்றாா் போல் தாா் மற்றும் பேவா் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. பழைய கால்வாய்கள் சில பகுதிகளில் உயா்த்தப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
பின்னர் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் கவுன்சிலா்கள் தங்களது பகுதி கோாிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றி தொிவித்தும் பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்தும் மேயா், ஆணையாிடம் மனுக்களை வழங்கினர்.கூட்டத்தில் பொறியாளர் தமிழ்ச்செல்வன். உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், பாலமுருகன், நகர அமைப்பு உதவி செயற் பொறியாளர்கள் காந்திமதி, ராமசந்திரன், முனீர் அகமது, நகா் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள், மண்டலத் தலைவர்கள் பால் குருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

