தூத்துக்குடி, ஜூலை 29:தூத்துக்குடி துறைமுகம் விரைவுச் சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே புதிய பாலம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வுமேற்க்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அதி கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தின்போது தூத்துக்குடியில் பெரும் பாலான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏறப்ட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மழைநீரை வெளியேற்று வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது, திருவிகநகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக தூத்துக்குடி துறைமுகம் விரைவுச் சாலையில் மீன் வளக்கல்லூரியின் எதிர்புறம் உள்ள பாலம் இடிக்கப்பட்டது தற்போது அந்த பகுதியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பாலம் கட்டுவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு
மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், தலைமை பொறியாளர் தமிழ்செல்வன். இள நிலை பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர்
பாலகுருசாமி, முத்தையாபுரம் பகுதி திமுக செயலாளர் மேகநாதன். மாமன்ற உறுப்பினர் விஜயகுமார். இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் அருண் சுந்தர், மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

