சந்தா கோச்சர் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை உறுதி. 78 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது.
புதுடில்லி: வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கியதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் சி.இ.ஓ., சந்தா கோச்சார் 64 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. மேலும், அவரது 78 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய எடுத்த முடிவு சரி என்றும் சந்தா கோச்சார் குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளது.
பழைய மாடலில் இயங்கி வந்த வங்கியை புதிய மாற்றம் கொண்டு வந்து வாடிக்கையாளர் சேவை மிகவும் இலகுவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்து தனது வங்கியில் ஐ சி. ஐ சி. ஐ அக்கவுண்ட் வைத்திருந்தால் பெருமிதம் என்று வாடிக்கையாளர் நினைக்கும் படி செய்தவர் சந்தா கோச்சர் (Chanda Kochhar) சி.இ.ஓ. இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்புரில் 1961ல் பிறந்தார் தனது கல்லூரி படிப்பை மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவரின் ஆளுமை திறனுக்காக 2010 ஐ.சி.ஐ.சிஐ. வங்கியில் சிறப்பான பங்களிப்புக்காக “பத்ம பூஷண்”குட்புரசு விருதை பெற்றார் அதேபோல் அமெரிக்கா டைம் 2015 நாளிதழ் வழங்கிய உலகில் 100 ஆற்றல் மிக்க பெண்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கடந்த 2012ம் ஆண்டு, கோச்சார் தலைமையிலான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குழு, வீடியோகான் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. வங்கி கடன் வழங்கிய மறுநாளே, வீடியோகான் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்.இ.பி.எல்., நிறுவனத்தின் வாயிலாக 64 கோடி ரூபாய், சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சார் நிர்வகித்து வந்த என்.ஆர்.பி.எல்., எனப்படும் நுபவர் ரினியூவபிள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சந்தா கோச்சார் பதவி நீக்கப்பட்டார். மேலும் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., 11,000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழுமத்தின் வி.என்.துாத் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன.இதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சொத்துக்களை விடுவிக்க உத்தரவிட்டிருந்த அதிகாரியின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உறுதி செய்தது. மேலும், லஞ்சம் பெற்றது உறுதியானதால், சந்தா கோச்சார் குற்றவாளி என்றும் தெரிவித்துள்ளது.

