தூத்துக்குடி,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாள் பயணமாக துாத்துக்குடி வருவதை ஒட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து ஜூலை 19 அன்று அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அதிமுக. மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்”
2026 இல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
விடியா திமுக ஆட்சியை அகற்றி விட்டு மீண்டும் புரட்சித்தலைவி ஜெ ஆட்சியை, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அமைக்க மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவரது சுற்றுப்பயணத் திற்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர்.அது போன்று துாத்துக்குடிக்கும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடியார் வருகிறார். 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி “மக்களைக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற உன்னத நோக்கத்துடன் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடியார் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி துாத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31ம்தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 1, 2 ஆகிய 3 நாட்கள் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
துாத்துக்குடி மாவட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு, வர்த்தக அணி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து எனது தலைமையில் துாத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கைலாஸ் மஹாலில் நாளை 19ம் தேதி மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகம், வட்டக்கழகம், தொழிற் சங்கம், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர் கள் உட்பட அதிமுக., அனுதாபிகள் அனை வரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

