December 1, 2025
#கோவில்பட்டி

கோவில்பட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில், மக்களிடம் மனுக்களைப் பெற்ற கனிமொழி எம்.பி

தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களுடன் கலந்துரையாடி மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள மற்றும் விடுபட்ட மகளிர்கள் விண்ணப்பிப்பதற்கு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகாமில் விண்ணப்பித்த மாற்று திறனாளி பயனாளிகளுக்கு உடனடியாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், மற்றும் ஐந்து மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சிறப்பு கைப்பேசிகளையும் கனிமொழி எம்பி, வழங்கினார்

உங்களுடன் ஸ்டாலின்” முகாமில்  அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, நகராட்சி தலைவர் கருணாநிதி 

இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி, உதவி ஆட்சியர் புவனேஷ்ராம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்நாயகம், மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர், ரமேஷ், மாவட்ட மகளிர் அணி வலைத்தள துணை ஒருங்கிணைப்பாளர் இந்துமதி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் துறை, நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.