December 1, 2025
#தூத்துக்குடி

புத்தொழில் களம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு, கனிமொழி எம்பி, சான்றிதழ் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் புத்தாக்க திட்டத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சான்றிதழ் வழங்கினார்.

புத்தாக்க திட்டம் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் புத்தாக்க மையம், தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில்

“ரைசிங் தூத்துக்குடி”

என்ற தலைப்பில் புத்தாக்க திட்டத்தின் கீழ் பயிற்சியை அளித்தது. இதில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 14.07.25 அன்று மாலைதூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் ஸ்டெம்ப் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி; பேசுகையில்;

சிறந்த புத்தொழில் சூழமைவினை கட்டமைப்பதிலும், பட்டதாரி இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவில் ஆர்வமுடையவர்களுக்கான செயல்திறன் பயிற்சி வழங்கிடவும், இந்த ரெய்சிங் தூத்துக்குடி (RISING THOOTHUKUDI) முக்கியத் தளமாக அமையும். 

நமது இளைஞர்கள் வேலைதேடி எங்கெங்கோ அலையக் கூடாது செல்லக் கூடாது. இதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்ப டுத்தி தொழில் முனைவோராக உருவாக வேண்டும். இதனால் தங்களைப் போன்ற பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் நீங்கள் வழங்க முடியும் இதற்கு தேவையான உதவிகளை புத்தொழில் களம் திட்டம் மூலமாக செய்து தருவோம் என கனிமொழி கருணாநிதி எம்பி கூறினார். 

இதனை தொடர்ந்து தூத்துக்குடி அறிஞர் அண்ணா பஸ்நிலைய வளாகத்தில் தூததுக்குடி மாவட்ட ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை கனிமொழி கருணாநிதி எம்பி, ஆய்வு செய்தார்.

அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். உடன் அமைச்சர் கீதாஜீவன், மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவர் ஸ்டாலின் ஜேக்கப், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்ட அலுவலர் ராகுல், மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

.