தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன (கவுன்சிலர்) உறுப்பினர் பதவிக்கு உதயா ஜூஸ் நிறுவனர் கெ.ஜஸ்டின் விருப்பமனு அளித்தார். தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கு உதயநிதி ஜூஸ் கார்னர் உரிமையாளர் கெ.ஜஸ்டின் தனது விருப்ப மனுவை மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ரூகேந்தர் லால் லிடம் வழங்கினார்.
பின்னர் ஜஸ்டின் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மாற்றுத்திறனாளி மக்களின் பாதுகாவலனாக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கு இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு நகராட்சி மாநகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன கவுன்சிலர்கள் நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளனர். இது மாற்றுத்திறனாளிகள் அனைவருடைய வாழ்வில் ஒளி ஏற்றிய ஒரு நிகழ்வாகும்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் எனக்கு செய்த உதவி மூலம் தூத்துக்குடியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கும், எளிய மக்களுக்கு உதவி செய்வது வழக்கம், தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளி மாமன்ற நியமன பதவிக்கு எனது விருப்பமனுவை மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ளேன். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்பைப் பெற்ற எனக்கு பணியாற்ற வாய்ப்பளித்தால் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொது மக்களுக்கும் 24 மணி நேரமும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். நிகழ்வில் தமீம் அன்சாரி, ஆபிரகாம் ஸ்டீபன், கற்பகவல்லி, செல்வகுமார், தமிழன்டா இயக்க தலைவர் உடனிருந்தனர்.

