தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார கூட்டம் 12.07.25 அன்று தூத்துக்குடி சிதம்பர நகர் ஆட்டோ காலனி பகுதியில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரையன்ட் நகர் பகுதி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் நிர்மல் சரவணக்குமாா் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் அமல்ராஜ் , மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், இரா.பிரவீன், முகமது ஜெயலாப்தீன், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாஸ்கர், முருகன், பிரதீப், சிவசங்கர், ஜாக்சன், ஜான்சன் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;
| அதிமுக பாஜக பொருந்தாத கூட்டணி |
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பிறந்த குழந்தை முதல் மாணவ மாணவிகள், மகளிர், முதியோர் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் விடியல் பயணம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், பள்ளி குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டே சொல்லலாம். தமிழ்நாட்டில் தான் தொழில் முதலீடு அதிகம் வருகிறது. இந்த சாதனை திட்டங்களை திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து எடுத்து கூறியும், அதேபோல ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் இழைத்து வரும் அநீதிகளையும், துரோகங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓரணியில் தமிழ்நாடாக இணைக்க வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டிற்கு முறைப்படி தரவேண்டிய நிதிகளை தர மறுத்து மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கிப் போட துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு பயனும் இல்லை எங்களுக்கு பயமும் இல்லை. இந்த கூட்டணியை 2019ல் படுதோல்வி அடையச் செய்து 40 க்கு 40 என்ற சாதனை வெற்றியை பெற்றுள்ளோம். 2021 ஆம் ஆண்டும் அதிமுக – பாஜக கூட்டணியை தோற்கடித்து தளபதியார் முதலமைச்சராக இருக்கிறார். இப்பொழுது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக – அதிமுக கூட்டணி வைத்துள்ளார்கள். காலையில் அமித்ஷா ஒரு கருத்தை சொல்கிறார் அதை மாலையில் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து பேசுகிறார். ஆக இது பொருந்தாத ஒவ்வாத கூட்டணியாக இருக்கிறது என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகளோ, நலத்திட்டங்களோ நடைபெறவில்லை. மாறாக தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசிடம் அடகு வைத்தது. அதனால் திமுக ஆட்சி அமைத்து தளபதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நாடு போற்றும் நான்காண்டு சாதனைகளை செய்து வருகிறார். இதை சகித்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்கிறேன் என்று கிளம்பி தப்பு தப்பாக பேசி உளறி கொட்டி வருகிறார். இதற்கு மக்களே தகுந்த பதில் கொடுத்து வருகின்றனர். விரைவில் அதிமுக பாஜக பொருந்தாத கூட்டணிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். திமுகவின் இளைஞர் அணி, மாணவரணி, ஐடி விங் தம்பிமார்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் மக்களை வீடு வீடாக சந்தித்து நம்முடைய தளபதியாரின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார உறுப்பினர் சேர்க்கை மூலம் நமது இயக்கத்தில் இணைக்க வேண்டும். மீண்டும் தளபதியார் முதலமைச்சராக பொறுப்பேற்க நம் அனைவரும் தொடர்ந்து களப்பணி ஆற்றி வெற்றிபெற வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், தலைமை செயற்குழு உறுப்பினர் மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பொருளாளர் சுசீ. ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதிச் செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், ரவீந்திரன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா இளம் பேச்சாளர் சஞ்சய், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், மூக்கையா, சுப்பையா, பாலசுப்பிரமணியன், லியோ ஜான்சன், சுரேஷ்குமார், சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, ரெக்ஸிலின், சரவணகுமார், இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் பிக்கப் தனபால், பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், தொண்டர் அணி சங்கர், நெசவாளர் அணி பெரிய நாயகம், மற்றும் பிரையன்ட் நகர் பகுதி பிரதிநிதிகள் சார்பு அணி அமைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.ரவி நன்றி கூறினார்.

