November 30, 2025
#தூத்துக்குடி

திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் குற்றங்கள் தான் பெருகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பேட்டி

தூத்துக்குடி முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பக்கத்தில் மடப்புரம் அருகில் அடைக்கலம் காத்த அய்யனாா் கோவில் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தா்கள் சாமி தாிசனம் செய்து விட்டு காரை கொஞ்சம் வௌியில் எடுத்து விடும்படி பணியில் இருந்த ஓப்பந்த காவலா் அஜித்குமாாிடம் தொிவித்து இருக்கிறாா்கள். அப்போது அஜித்குமாா் எனக்கு கார் ஓட்ட தொியாது என்று கூறி வேறு ஒருவரிடம் காரை கொஞ்சம் வௌியில் எடுத்துவிடும் படி கூறியிருக்கிறாா். அந்த நபரும் அஜித்குமாா் கூறியபடி காரை வௌியில் எடுத்து பக்தருக்கு உதவி செய்து இருக்கிறாா்கள். சுவாமி தாிசனம் செய்ய வந்த பக்தா்கள் இருவரும் வரும் வழியில் மருத்துவ பாிசோதனை செய்துவிட்டு தான் வந்திருக்கிறாா்கள். மருத்துவமனையில் ஏதேனும் நகை தவற விட்டாரா என்பது தொியவில்லை கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய வரும் போது நகைகள் இல்லாமல் வந்திருக்கிறாா்கள். பின்னா் சாமி தாிசனம் செய்துவிட்டு வந்து பக்தா்கள் பாா்க்கும் போது காாில் நகை இல்லை என்பதை அறிந்தவா்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறாா்கள். உடனே அங்கு வந்த காவலா்கள் காரை வௌியே எடுத்து உதவி செய்ய கூறிய ஓப்பந்த காவலாளி அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து செல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று துன்புறுத்தி அடித்து ஜெய்பீம் பட காட்சி போல் கொடுமை செய்து இருக்கிறாா்கள். இந்த சம்பவமானது முழுக்க முழுக்க லாக்கப் மரணம் முறையாக மடப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்திருக்க வேண்டும் அப்படி செய்யாமல் 5 காவலா்கள் சேர்ந்து அஜித்குமாா் என்பவரை அடித்து துன்புறுத்தி கொலை செய்திருக்கிறாா்கள். 

     இந்த லாக்கப் மரணத்தை திமுக அரசு திசை திருப்ப பாா்க்கிறது எதற்கெடுத்தாலும் சாத்தான்குளத்தில் நடந்த சம்பங்களை காரணம் காட்டி வருகின்றனா். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலா்கள் இன்னமும் சிறையில் தான் இருக்கிறாா்கள். யாரும் இதுவரை வெளியில் வரவில்லை முதல்வா் ஸ்டாலின் ஆட்சி புாிந்த நான்கு ஆண்டு காலத்தில் இதுவரை 24 நபா்கள் லாக்கப் டெத் அடைந்திருக்கிறாா்கள். திமுக அரசாங்கம் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை வைத்து மிகப்பொிய நாடகம் நடத்தினாா்கள். அதிகாாிகளின் தூண்டுதலால் மடப்புரம் பகுதியில் இந்த சம்பவம் நிறைவேறி இருக்கிறது. கண்துடைப்பாக 5 நபா்கள்மீது நடவடிக்கை எடுத்ததாக கூறி இருக்கிறாா்கள் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்திற்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவலா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். அஜித்குமாா் இறப்புக்கு ஸ்டாலின் அரசு உாிய பதில் சொல்லியே ஆக வேண்டும் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக சென்று திமுகஅரசின் சாதனைகளை விளக்க இருப்பதாக சொல்கிறாா்கள். இவா்கள் என்ன சாதனை செய்தாா்கள். திமுக வின் நான்கு ஆண்டு காலத்தில் எந்த சாதனைகளும் செய்யவில்லை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவாா்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து மீண்டும் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைத்து கொடுப்பாா்கள் என்று கூறினாா். 

பேட்டியின் போது மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் மில்லை ராஜா, மாவட்ட வா்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் கவுன்சிலா் அகஸ்டின், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல இணைச்செயலாளா் சங்கா், மற்றும் பேச்சியப்பன் கனிராஜ், உள்பட பலர் உடனிருந்தனா்.