December 1, 2025
#தூத்துக்குடி

புதிய ஸ்மார்ட் கார்டுகள் 573 பயனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி,தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் மற்றும், வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலரிடமும், புதிய குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து இம் மனுக்களை ஆய்வு செய்து 573 பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய ஸ்மார்ட் கார்டினை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று 28.06.25 நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ஞானராஜ் முன்னிலையில் புதிய ஸ்மார்ட் கார்டுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். குடும்ப அட்டைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.

விளையாட்டு அணிகளுக்கு கிரிக்கெட் மற்றும் வாலிபால் உபகரணங்களை வழங்கிய அமைச்சர்கீதாஜீவன்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள் அமைச்சர் கீதா ஜீவன் வசம் கிரிக்கெட் மற்றும் வாலிபால் உபகரணங்கள் வேண்டுமென கேட்டிருந்த நிலையில், என்டிபிஎல் கிரிக்கெட் அணி, 49 வார்டு மூனு சென்ட் பகுதி கிரிக்கெட் மற்றும் வாலிபால் அணி, காவலர் கிரிக்கெட் அணி, வருவாய்த்துறை கிரிக்கெட் அணி உட்பட ஐந்து அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், மற்றும் கைப்பந்து உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பால குருசாமி, குடிமை பொருள் வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், வெங்கடேஷ், சதீஸ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி இணை செயலாளர் அன்பழகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, தனலட்சுமி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர் செந்தில்குமார், பாலு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்கின் ராபர்ட், பகுதி துணை செயலாளர் ஜெயசிங், வட்ட பிரதிநிதி பாஸ்கர், வட்ட அவைத் தலைவர் பெரியசாமி மற்றும் அல்பர்ட், மணி, அற்புத ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.